Map Graph

மத்திய சமசுகிருதப் பல்கலைக்கழகம்

இந்தியாவிலுள்ள மத்தியப் பல்கலைக்கழகம்

மத்திய சமசுகிருதப் பல்கலைக்கழகம் இந்தியாவின் புதுதில்லி நகரில் அமைந்துள்ளது. முன்னதாக இது இராசுட்ரிய சமசுகிருத சன்சுதான் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. 1970 ஆம் ஆண்டில் சமசுகிருத மொழியை மேம்படுத்துவதற்காக இப்பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. பல்கலைக்கழகம் இந்திய அரசாங்கத்தின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்கள், இளநிலை கல்வியியல் மற்றும் முதுநிலை கல்வியியல் பட்டங்களுக்கான கற்பித்தல் இங்கு நடைபெறுகிறது.

Read article